Goddestination

Al-Ma'aarij

அல்-மஆரிஜ்

ஏறும் படிக்கட்டுகள்

44 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 سَأَلَ سَاۤىِٕلُۢ بِعَذَابࣲ وَاقِعࣲ

    சாயல சாயில் பிஅழாப் வாகிஎ

    (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

  2. 2 لِّلۡكَـٰفِرِینَ لَیۡسَ لَهُۥ دَافِعࣱ

    லில் காஃபிரீன் லைஸ தாஃபிஎ

    காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

  3. 3 مِّنَ ٱللَّهِ ذِی ٱلۡمَعَارِجِ

    மின் அல்லாஹ் தி அல்மாஆரிஜ்

    (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

  4. 4 تَعۡرُجُ ٱلۡمَلَـٰۤىِٕكَةُ وَٱلرُّوحُ إِلَیۡهِ فِی یَوۡمࣲ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِینَ أَلۡفَ سَنَةࣲ

    தஅருஜு அல்-மலாயிகா வர்ரூஹு இலாய்ஹி ஃபே யவும் கானா மிக்தாருஹு கம்ஸீன் அலிஃப் சன

    ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

  5. 5 فَٱصۡبِرۡ صَبۡرࣰا جَمِیلًا

    ஃபாஸ்பிர் ஸப்ரன் ஜமீல்

    எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

  6. 6 إِنَّهُمۡ یَرَوۡنَهُۥ بَعِیدࣰا

    இன்னாஹும் யாரவ்னஹு பயித்

    நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

  7. 7 وَنَرَىٰهُ قَرِیبࣰا

    நாங்கள் அவரைப் பார்க்கிறோம் கரீபன்

    ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

  8. 8 یَوۡمَ تَكُونُ ٱلسَّمَاۤءُ كَٱلۡمُهۡلِ

    யவும் தகூனூ அஸ்-ஸமாஉ கால்முஹ்லி

    வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-

  9. 9 وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ

    வ தகூனு அல்-ஜிபாலு கலிஹ்னி

    இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-

  10. 10 وَلَا یَسۡـَٔلُ حَمِیمٌ حَمِیمࣰا

    யஸலு ஹமீம் ஹமீம்

    (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

  11. 11 یُبَصَّرُونَهُمۡۚ یَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِی مِنۡ عَذَابِ یَوۡمِىِٕذِۭ بِبَنِیهِ

    யுபஸ்ஸாரூனாஹும் யவ்த்து அல்-முஜ்ரிம் லௌ யஃப்ததி அஸாப் யவ்மீழ் பிபேநியெ

    அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

  12. 12 وَصَـٰحِبَتِهِۦ وَأَخِیهِ

    வஸாஹிபதிஹி மற்றும் அவரது சகோதரர்

    தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

  13. 13 وَفَصِیلَتِهِ ٱلَّتِی تُـٔۡوِیهِ

    வஃபஸிலதிஹி அல்-லாதீ தெவிஹ

    அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

  14. 14 وَمَن فِی ٱلۡأَرۡضِ جَمِیعࣰا ثُمَّ یُنجِیهِ

    வமன் ஃபே அல்-அர்த் ஜமிஅன் தும்ம யூன்ஜிஹே

    இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

  15. 15 كَلَّاۤۖ إِنَّهَا لَظَىٰ

    இன்னாஹா லழா

    அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.

  16. 16 نَزَّاعَةࣰ لِّلشَّوَىٰ

    நழ்ழாஆத லிஷ்ஷவா

    அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

  17. 17 تَدۡعُوا۟ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ

    ததுஆ அத்பார்

    (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

  18. 18 وَجَمَعَ فَأَوۡعَىٰۤ

    வஜம ஃபஅவ்ஆ

    அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)

  19. 19 ۞ إِنَّ ٱلۡإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا

    இன்னா அல்-இன்சான் குலிகா ஹலூஅன்

    நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

  20. 20 إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعࣰا

    இழா மஸ்ஸஹு அஷ்-ஷர்ரு ஜஸூஅன்

    அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,

  21. 21 وَإِذَا مَسَّهُ ٱلۡخَیۡرُ مَنُوعًا

    வா இழா மஸ்ஸஹு அல்-கைர் மனுஆன்

    ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.

  22. 22 إِلَّا ٱلۡمُصَلِّینَ

    இல்லா அல் முஸல்லீன்

    தொழுகையாளிகளைத் தவிர-

  23. 23 ٱلَّذِینَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَاۤىِٕمُونَ

    அல்லாழீன ஹும் அலா ஸலாதிஹிம் தைமூன்

    (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.

  24. 24 وَٱلَّذِینَ فِیۤ أَمۡوَ ٰ⁠لِهِمۡ حَقࣱّ مَّعۡلُومࣱ

    வல்லாழீன அம்வா நம்பிக்கை லெஹிம் ஹக்

    அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.

  25. 25 لِّلسَّاۤىِٕلِ وَٱلۡمَحۡرُومِ

    லில்ஸாயில் வல் மஹ்ரூமி

    யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

  26. 26 وَٱلَّذِینَ یُصَدِّقُونَ بِیَوۡمِ ٱلدِّینِ

    வல்லாழீன யூஸத்தீகூன் ப்யௌமி அத்-தீன்

    அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.

  27. 27 وَٱلَّذِینَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ

    வல்லாழீன அஸாப் முஷ்ஃபிகூன்

    இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.

  28. 28 إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَیۡرُ مَأۡمُونࣲ

    இன்னா அஸாப் ரப்பிஹிம் கைர் மாமூன்

    நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.

  29. 29 وَٱلَّذِینَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَـٰفِظُونَ

    வல்லாழீன ஹும் லெ-ஃபு-ரு-ஜி-ஹெம் ஹாஃபிஸூன்

    அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-

  30. 30 إِلَّا عَلَىٰۤ أَزۡوَ ٰ⁠جِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَیۡمَـٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَیۡرُ مَلُومِینَ

    இல்லா அஃஸ்வ நம்பிக்கை ஜெஹெம் ஔ மலகத் ஐமானுஹும் பா-இன்ன-ஹும் கைர் மாலுமினா

    தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

  31. 31 فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَاۤءَ ذَ ٰ⁠لِكَ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡعَادُونَ

    ஃபாமன் இப்தகா வராஆ ழ நம்பிக்கை லேகா ஃபௌலைக் ஹம் அல்-ஆதூன்

    எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.

  32. 32 وَٱلَّذِینَ هُمۡ لِأَمَـٰنَـٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَ ٰ⁠عُونَ

    வல்லாழீன ஹும் லெஅமானாதிஹிம் வஅஹ்திஹிம் ர நம்பிக்கை ஔன்

    இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

  33. 33 وَٱلَّذِینَ هُم بِشَهَـٰدَ ٰ⁠تِهِمۡ قَاۤىِٕمُونَ

    வல்லாழீன பெஷஹத நம்பிக்கை தெஹெம் காயிமூன

    இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.

  34. 34 وَٱلَّذِینَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ یُحَافِظُونَ

    வல்லாழீன ஹும் அலா ஸலாதிஹிம் யூஹாஃபிஃஜூன்

    எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

  35. 35 أُو۟لَـٰۤىِٕكَ فِی جَنَّـٰتࣲ مُّكۡرَمُونَ

    உலாய்க ஃபே முக்ரமூன்

    (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

  36. 36 فَمَالِ ٱلَّذِینَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهۡطِعِینَ

    ஃபேமாலி அல்லாழீன கஃபரூ கிபாலக முஹ்டிஈன்

    நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.

  37. 37 عَنِ ٱلۡیَمِینِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِینَ

    அனே அல்-யமீன் வஅனி அஷ்-ஷிமாலி இஜீன

    வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.

  38. 38 أَیَطۡمَعُ كُلُّ ٱمۡرِئࣲ مِّنۡهُمۡ أَن یُدۡخَلَ جَنَّةَ نَعِیمࣲ

    அயா த்மாவு குல்லு இம்ரி மின்ஹும் அன் யுதல ஜன்னா நஈம்

    அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?

  39. 39 كَلَّاۤۖ إِنَّا خَلَقۡنَـٰهُم مِّمَّا یَعۡلَمُونَ

    மிம்மா யால்மூன்

    அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.

  40. 40 فَلَاۤ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَـٰرِقِ وَٱلۡمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ

    உக்ஸிமு பெரப்பி அல்-மஷாரிகி வல்மகாரிபி லகாதிரூன்

    எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

  41. 41 عَلَىٰۤ أَن نُّبَدِّلَ خَیۡرࣰا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِینَ

    அன் நுபத்தில கைரன் மின்ஹும் வமா நஹ்னு பிமஸ்புகீன

    (அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.

  42. 42 فَذَرۡهُمۡ یَخُوضُوا۟ وَیَلۡعَبُوا۟ حَتَّىٰ یُلَـٰقُوا۟ یَوۡمَهُمُ ٱلَّذِی یُوعَدُونَ

    ஃபத்த்ருஹும் யாஹுழுவா வய்லஅபூ ஹத்தா யெலாகுவ யௌமஹும் அல்லாழீ யூஓஅதூன்

    ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.

  43. 43 یَوۡمَ یَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعࣰا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبࣲ یُوفِضُونَ

    யவும் யஃக்ருஜூன் மின அல்-அஜ-தாஸ் ஸேராஆன் கஅன்னாஹும் இலா நுஸுப் யூஃபிதுஆன்

    நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.

  44. 44 خَـٰشِعَةً أَبۡصَـٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةࣱۚ ذَ ٰ⁠لِكَ ٱلۡیَوۡمُ ٱلَّذِی كَانُوا۟ یُوعَدُونَ

    காஷிஆ அப்ஸாருஹும் தர்ஹாகுஹும் ழில்லத் ழ நம்பிக்கை லேகா அல்-யவுமு அல்லாழீ கானூ யூஓஅதூன்

    அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.

This surah in other languages