Al-Haaqqa
அல்-ஹாக்கா
தீர்க்கமான நிகழ்வு
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 ٱلۡحَاۤقَّةُ
அல்-ஹாக்கா
நிச்சயமானது.
- 2 مَا ٱلۡحَاۤقَّةُ
அல்-ஹாக்கா
நிச்சயமானது எது?
- 3 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَاۤقَّةُ
அத்ராகா அல்-ஹாக்கா
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- 4 كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ
கத்தபத் தமூது வஅது பில் காரிஅதி
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
- 5 فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُوا۟ بِٱلطَّاغِیَةِ
பாமா தமூது ஃபௌஹ்லிகு பில்-தாகியதி
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
- 6 وَأَمَّا عَادࣱ فَأُهۡلِكُوا۟ بِرِیحࣲ صَرۡصَرٍ عَاتِیَةࣲ
வா அம்மா அத் ஃபௌஹ்லிகு பிரேஹ் ஸர்ஸர் ஆதியா
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
- 7 سَخَّرَهَا عَلَیۡهِمۡ سَبۡعَ لَیَالࣲ وَثَمَـٰنِیَةَ أَیَّامٍ حُسُومࣰاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِیهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِیَةࣲ
சஃக்ஃகரஹா அலைஹிம் சபஅ லயால் வஸமானிய அய்யாமின் ஹுஸுமன் ஃபதரா அல்-கவ்ம் பிஹா ஸரியா கஅன்னாஹும் ஆஜாஸ் நக்லின் காவியா
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
- 8 فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِیَةࣲ
ஃபஹல் தரா பாகியா
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
- 9 وَجَاۤءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَـٰتُ بِٱلۡخَاطِئَةِ
வஜா பிர்அவ்ன் வமன் கிப்லாஹு வல் முதஃபிகாத் பில் காதியா
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
- 10 فَعَصَوۡا۟ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةࣰ رَّابِیَةً
ஃபாஅஸௌ ரசூல் ரப்பிஹிம் ஃபாஃகழஹும் அக்ஸா ராபியா
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
- 11 إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَاۤءُ حَمَلۡنَـٰكُمۡ فِی ٱلۡجَارِیَةِ
லம்மா தகா அல்-மா ஹமெல்நகும் ஃபே அல்-ஜாரியா
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
- 12 لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةࣰ وَتَعِیَهَاۤ أُذُنࣱ وَ ٰعِیَةࣱ
லெ-நஜ-அலாஹா லகும் வதியஹா காது மற்றும் நம்பிக்கை ஐய்யா
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
- 13 فَإِذَا نُفِخَ فِی ٱلصُّورِ نَفۡخَةࣱ وَ ٰحِدَةࣱ
ஃபைழா நுஃபேகா ஃபே அஸ்-ஸூரீ நஃப்கா மற்றும் நம்பிக்கை ஹெத
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
- 14 وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةࣰ وَ ٰحِدَةࣰ
வா-ஹு-மி-லெதி அல்-அர்த் வல்-ஜிபாலு ஃபதூகதா தக்கா மற்றும் நம்பிக்கை
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
- 15 فَیَوۡمَىِٕذࣲ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
ஃபயவ்மிழ் வகதி அல்-வாக்கியாஹ்
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
- 16 وَٱنشَقَّتِ ٱلسَّمَاۤءُ فَهِیَ یَوۡمَىِٕذࣲ وَاهِیَةࣱ
வான்ஷிக்காதி அஸ்-ஸமாஉ பஹிய யவ்மைழின் வாஹியா
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
- 17 وَٱلۡمَلَكُ عَلَىٰۤ أَرۡجَاۤىِٕهَاۚ وَیَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ یَوۡمَىِٕذࣲ ثَمَـٰنِیَةࣱ
வல் மலக் அர்ஜாஆஇஹா வயஹ்மிலு அர்ஷ் ரப்பிக் ஃபௌகஹும் யவ்மைழின் தமானிய
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
- 18 یَوۡمَىِٕذࣲ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِیَةࣱ
யவ்மைழின் துஉ'ரழூன் தக்ஃபா மின்கும் காஃபியா
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
- 19 فَأَمَّا مَنۡ أُوتِیَ كِتَـٰبَهُۥ بِیَمِینِهِۦ فَیَقُولُ هَاۤؤُمُ ٱقۡرَءُوا۟ كِتَـٰبِیَهۡ
பாமா உதிய கிதாபாஹு பியாமினேஹி ஃபயாகுலு ஹாவும் இக்ரா கிதாபியா
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.
- 20 إِنِّی ظَنَنتُ أَنِّی مُلَـٰقٍ حِسَابِیَهۡ
இன்னீ ஜனந்து அன்னீ முலாகின் ஹிஸாபியா
"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."
- 21 فَهُوَ فِی عِیشَةࣲ رَّاضِیَةࣲ
பஹுவ ஃபே ஐஷா ராஸியா
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
- 22 فِی جَنَّةٍ عَالِیَةࣲ
ஃபே ஜன்னா ஆலியா
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
- 23 قُطُوفُهَا دَانِیَةࣱ
குதூபுஹா தானியா
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
- 24 كُلُوا۟ وَٱشۡرَبُوا۟ هَنِیۤـَٔۢا بِمَاۤ أَسۡلَفۡتُمۡ فِی ٱلۡأَیَّامِ ٱلۡخَالِیَةِ
குலூ வஷ்ருபூ ஹானியா அஸ்லஃப்தும் ஃபே அல்-அய்யாமி அல் காலீயாதி
"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).
- 25 وَأَمَّا مَنۡ أُوتِیَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَیَقُولُ یَـٰلَیۡتَنِی لَمۡ أُوتَ كِتَـٰبِیَهۡ
வா அம்மா உதிய கிதாபாஹு பிஷ்மாலிஹி ஃபயாகுலு யல்யேதனி லம் ஊதா கிதாபியா
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
- 26 وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِیَهۡ
வலம் அத்ரி ஹிஸாபியா
"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
- 27 یَـٰلَیۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِیَةَ
யால்யதா காநத் அல்-காதியா
"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
- 28 مَاۤ أَغۡنَىٰ عَنِّی مَالِیَهۡۜ
மா அஃக்னா அன்னி மாலியா
"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
- 29 هَلَكَ عَنِّی سُلۡطَـٰنِیَهۡ
ஹலக அன்னி சுல்தானியா
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).
- 30 خُذُوهُ فَغُلُّوهُ
குஃபுஃஉ ஃபகுல்லுஹு
"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."
- 31 ثُمَّ ٱلۡجَحِیمَ صَلُّوهُ
தும்ம அல்-ஜஹீம் ஸல்லுஹு
"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
- 32 ثُمَّ فِی سِلۡسِلَةࣲ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعࣰا فَٱسۡلُكُوهُ
தும்ம ஃபே சில்சிலா றாரஹா சபுனா ழிரான் ஃபாஸ்லுகுஹு
"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).
- 33 إِنَّهُۥ كَانَ لَا یُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِیمِ
இன்னாஹு கானா யூமினு பில்லாஹி அல்-அஸீம்
"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."
- 34 وَلَا یَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِینِ
யஹுஸ்ஸு அலா தாமிம் அல்-மிஸ்கீன்
"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."
- 35 فَلَیۡسَ لَهُ ٱلۡیَوۡمَ هَـٰهُنَا حَمِیمࣱ
ஃபலாய்ஸ லஹு அல்-யவ்ம ஹாஹுனா ஹமீம்
"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."
- 36 وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِینࣲ
தாம் இல்லா கிஸ்லீன்
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
- 37 لَّا یَأۡكُلُهُۥۤ إِلَّا ٱلۡخَـٰطِـُٔونَ
லா யாகுலுஹு இல்லா அல்-காதிஊன்
"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."
- 38 فَلَاۤ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ
உக்ஸிமு பிமா துப்ஸிரூன்
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
- 39 وَمَا لَا تُبۡصِرُونَ
வமா துப்ஸிரூன்
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
- 40 إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِیمࣲ
இன்னாஹு லகௌல் கரீம்
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
- 41 وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرࣲۚ قَلِیلࣰا مَّا تُؤۡمِنُونَ
வமா ஹு பிகௌலி ஷாயிர் கலீலான் மா துமினூன்
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
- 42 وَلَا بِقَوۡلِ كَاهِنࣲۚ قَلِیلࣰا مَّا تَذَكَّرُونَ
பிகௌலி காஹின் கலீலான் மா தஸ்க்கரூன்
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
- 43 تَنزِیلࣱ مِّن رَّبِّ ٱلۡعَـٰلَمِینَ
தன்ஸீல் மின் ரப்பி அல்-ஆலமீன்
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
- 44 وَلَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِیلِ
வலௌ தகவ்வலா அலைனா பஸ் அல்-அகாவில்
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
- 45 لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡیَمِینِ
லாஅக்ஃஸ்னா மின்ஹு பில்யமீன்
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
- 46 ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِینَ
தும்ம லகாதஅனா மின்ஹு அல்-வதீன்
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
- 47 فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَـٰجِزِینَ
ஃபமா அஹதின் அன்ஹு ஹாஜிஜீனா
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
- 48 وَإِنَّهُۥ لَتَذۡكِرَةࣱ لِّلۡمُتَّقِینَ
வா இன்னாஹு லதஃஜ்கிரா லில்முத்தகீன்
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
- 49 وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِینَ
வா இன்னா லெனால்மு அன்ன முகத்திபீன்
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
- 50 وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَـٰفِرِینَ
வா இன்னாஹு லாஹஸ்ரதுன் அலை அல்-காஃபிரீன்
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
- 51 وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡیَقِینِ
வா இன்னாஹு லஹக் அல்-யகீனி
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
- 52 فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِیمِ
ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிக் அல்-அஸீம்
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
This surah in other languages
- বাংলা আল-হাক্কাহ
- Bosanski El-Hakka
- Нохчийн Аль-ХӀаккъа
- Deutsch Al-Hāqqa
- English Al-Haaqqah
- Español Al-Hāqqah
- فارسی الحاقه
- Français Al-Hāqqah
- Hausa Al-Haa'ikah
- עברית אל-חאקה
- हिन्दी अल-हाक़्क़ा
- Bahasa Indonesia Al-Haqqah
- 한국어 알-하카
- کوردی El-Haqqa
- Bahasa Melayu Al-Haaqqah
- Nederlands Al-Haaqqa
- پنجابی الحاقہ
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਹਾਕ਼'ਆ
- پښتو الحاقه
- Português Al-Hāqqah
- Русский Аль-Хакка
- Soomaaliga Al-Xaaqa
- Shqip El-Hakka
- Kiswahili Al-Haaqa
- தமிழ் அல்-ஹாக்கா
- ไทย อัล-ฮากเกาะฮ์
- Türkçe El-Hâkka
- اردو الحاقہ
- Oʻzbek Al-Hoqqa
- 中文 哈盖