Goddestination

Al-Ghaashiya

அல்-காஷியா

மூடுபனி

26 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 هَلۡ أَتَىٰكَ حَدِیثُ ٱلۡغَـٰشِیَةِ

    ஹல் அதியாகா ஹதீஸ் அல்-காஷியா

    சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

  2. 2 وُجُوهࣱ یَوۡمَىِٕذٍ خَـٰشِعَةٌ

    வுஜுஹ யவ்மைழின் காஷிஆ

    அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

  3. 3 عَامِلَةࣱ نَّاصِبَةࣱ

    ஆமிலா நாஸிபா

    அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

  4. 4 تَصۡلَىٰ نَارًا حَامِیَةࣰ

    தஸ்லா நாரா ஹாமியா

    கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

  5. 5 تُسۡقَىٰ مِنۡ عَیۡنٍ ءَانِیَةࣲ

    துஸ்கா ஐன் அனியா

    கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

  6. 6 لَّیۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِیعࣲ

    லைஸ லாஹும் தாம் இல்லா மின் றரிஇ

    அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

  7. 7 لَّا یُسۡمِنُ وَلَا یُغۡنِی مِن جُوعࣲ

    லா யுஸ்மினு யுக்னீ மின் ஜூ

    அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.

  8. 8 وُجُوهࣱ یَوۡمَىِٕذࣲ نَّاعِمَةࣱ

    வுஜுஹ யவ்மைழின் நாயிமா

    அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

  9. 9 لِّسَعۡیِهَا رَاضِیَةࣱ

    லிஸஈஹா

    தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

  10. 10 فِی جَنَّةٍ عَالِیَةࣲ

    ஃபே ஜன்னா ஆலியா

    உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

  11. 11 لَّا تَسۡمَعُ فِیهَا لَـٰغِیَةࣰ

    லா தஸ்மாஉ பிஹா லாகியா

    அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

  12. 12 فِیهَا عَیۡنࣱ جَارِیَةࣱ

    பிஹா ஐன் ஜாரியா

    அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

  13. 13 فِیهَا سُرُرࣱ مَّرۡفُوعَةࣱ

    பிஹா சுருர் மார்ஃபுஆஹுங்

    அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

  14. 14 وَأَكۡوَابࣱ مَّوۡضُوعَةࣱ

    வா அக்வாபுன் மௌஜுஆஹ

    (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

  15. 15 وَنَمَارِقُ مَصۡفُوفَةࣱ

    வெனமாரிகு மாஸ்ஃபுஃபாஹ்

    மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

  16. 16 وَزَرَابِیُّ مَبۡثُوثَةٌ

    வெஜராபிய்யு மப்துதா

    விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

  17. 17 أَفَلَا یَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَیۡفَ خُلِقَتۡ

    அ-ஃபா-லா யான்ஸுரூன் இலா அல்-இபீலீ கைஃபா குலிகத்

    (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

  18. 18 وَإِلَى ٱلسَّمَاۤءِ كَیۡفَ رُفِعَتۡ

    வ இலா அஸ்-சமா கைஃபா ருஃபிஅத்

    மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

  19. 19 وَإِلَى ٱلۡجِبَالِ كَیۡفَ نُصِبَتۡ

    வ இலா அல்-ஜிபால் கைஃபா நுஸிபத்

    இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

  20. 20 وَإِلَى ٱلۡأَرۡضِ كَیۡفَ سُطِحَتۡ

    வ இலா அல்-அர்த் கைஃபா சுதெஹத்

    இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

  21. 21 فَذَكِّرۡ إِنَّمَاۤ أَنتَ مُذَكِّرࣱ

    ஃபஸ்கிர் இன்னமா அந்த முழக்கிர்

    ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

  22. 22 لَّسۡتَ عَلَیۡهِم بِمُصَیۡطِرٍ

    லாஸ்த பிமுஸய்டிர்

    அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

  23. 23 إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    இல்லா மேன் தவல்லா வ கஃபர

    ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

  24. 24 فَیُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

    ஃபயுஅத்திபு அல்லாஹ் அல்-அஸாப் அல்-அக்பர்

    அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

  25. 25 إِنَّ إِلَیۡنَاۤ إِیَابَهُمۡ

    இன்னா இலைனா இயாபஹும்

    நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

  26. 26 ثُمَّ إِنَّ عَلَیۡنَا حِسَابَهُم

    தும்ம இன்னா அலைனா ஹிஸாபஹும்

    பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

This surah in other languages