Goddestination

Al-A'laa

அல்-ஆலா

மிக உயர்ந்தவன்

19 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

    சப்பிஹ் இஸ்ம் ரப்பிக் அல் ஆ'லா

    (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

  2. 2 ٱلَّذِی خَلَقَ فَسَوَّىٰ

    அல்லாழீ கலக ஃபஸவ்வா

    அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

  3. 3 وَٱلَّذِی قَدَّرَ فَهَدَىٰ

    வல்லாழி க்த்தார ஃபஹதியா

    மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

  4. 4 وَٱلَّذِیۤ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

    அக்ரஜ அல்-மார்ஆ

    அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.

  5. 5 فَجَعَلَهُۥ غُثَاۤءً أَحۡوَىٰ

    ஃபஜஅலஹு குதா ஆன் அஹ்வா

    பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.

  6. 6 سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰۤ

    சனுக்ரிஉகு ஃபலா தன்ஸா

    (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

  7. 7 إِلَّا مَا شَاۤءَ ٱللَّهُۚ إِنَّهُۥ یَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا یَخۡفَىٰ

    இல்லா ஷா இன்னாஹு யாலமு அல்-ஜஹ்ரா வமா யஃக்ஃபா

    அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.

  8. 8 وَنُیَسِّرُكَ لِلۡیُسۡرَىٰ

    வா-நு-யஸ்-சிர்-கா லில் யுஸ்ரா

    அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.

  9. 9 فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

    ஃபஸ்கிர் இன் னஃபஅதி அஸ்-ஸிக்ரா

    ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.

  10. 10 سَیَذَّكَّرُ مَن یَخۡشَىٰ

    ஸய்யத்தக்கரு மேன் யக்ஷா

    (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

  11. 11 وَیَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

    வயதஜன்னாபுஹா அல்-அஷ்கா

    ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

  12. 12 ٱلَّذِی یَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

    அல்லாழீ யஸ்லா அன்-னார் அல்-குப்ரா

    அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

  13. 13 ثُمَّ لَا یَمُوتُ فِیهَا وَلَا یَحۡیَىٰ

    தும்ம யமுது பிஹா யஹ்யா

    பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

  14. 14 قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

    கத் அஃப்லஹ மேன் தஃஜக்கா

    தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

  15. 15 وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

    வழகர இஸ்ம் ஃபஸல்லா

    மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.

  16. 16 بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا

    து'திரூன் அல்-ஹயாத் துனியா

    எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

  17. 17 وَٱلۡـَٔاخِرَةُ خَیۡرࣱ وَأَبۡقَىٰۤ

    வல்-ஆகிரது கைர் வா அப்கா

    ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.

  18. 18 إِنَّ هَـٰذَا لَفِی ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

    இன்னா ஹாஸா லாஃபி அஸ்-ஸுஹுஃபி அல்-உலா

    நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-

  19. 19 صُحُفِ إِبۡرَ ٰ⁠هِیمَ وَمُوسَىٰ

    ஸுஹுஃபி இப்ரா நம்பிக்கை ஹேம வமூசா

    இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.

This surah in other languages