Goddestination

Al-Mursalaat

அல்-முர்சலாத்

அனுப்பப்பட்டவை

50 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلۡمُرۡسَلَـٰتِ عُرۡفࣰا

    வல் முர்ஸலாத் உர்ஃபான்

    தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

  2. 2 فَٱلۡعَـٰصِفَـٰتِ عَصۡفࣰا

    ஃபலாஸிஃபாத் அஸ்ஃபான்

    வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

  3. 3 وَٱلنَّـٰشِرَ ٰ⁠تِ نَشۡرࣰا

    வல்னாஷிரா நம்பிக்கை டெ நஷ்ரன்

    (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

  4. 4 فَٱلۡفَـٰرِقَـٰتِ فَرۡقࣰا

    ஃபால் ஃபாரிகாதி பர்கன்

    (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

  5. 5 فَٱلۡمُلۡقِیَـٰتِ ذِكۡرًا

    ஃபால்முல்கியாதி திக்ரா

    (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-

  6. 6 عُذۡرًا أَوۡ نُذۡرًا

    உஸ்ரான் ஔ நுழ்ரா

    (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

  7. 7 إِنَّمَا تُوعَدُونَ لَوَ ٰ⁠قِعࣱ

    துஆதூனோன் லவ நம்பிக்கை காஃப்

    நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

  8. 8 فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ

    ஃபைழா அன்-நுஜூம் துமேஸத்

    இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

  9. 9 وَإِذَا ٱلسَّمَاۤءُ فُرِجَتۡ

    வா இழா அஸ்-ஸமாஉ ஃபுரிஜாத்

    மேலும், வானம் பிளக்கப்படும் போது-

  10. 10 وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ

    வா இழா அல்-ஜிபாலு நுஸெஃபத்

    அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-

  11. 11 وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

    வா இழா அர்-ருஸுலு உக்திதத்

    மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-

  12. 12 لِأَیِّ یَوۡمٍ أُجِّلَتۡ

    லே ஐ யௌம் உஜ்ஜிலத்

    எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

  13. 13 لِیَوۡمِ ٱلۡفَصۡلِ

    லேயோமி அல்-ஃபஸ்லி

    தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

  14. 14 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلۡفَصۡلِ

    அத்ராகா யவும் அல்-ஃபஸ்லி

    மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

  15. 15 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

  16. 16 أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِینَ

    அலம் நுஹ்லிகி அல்-அவ்வாலீன்

    முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

  17. 17 ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡـَٔاخِرِینَ

    தும்ம நுத்பிஉஹும் அல்-ஆகிரீன்

    பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

  18. 18 كَذَ ٰ⁠لِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِینَ

    கழ நம்பிக்கை லேகா நஃபஅலு பில் முஜ்ரிமீன்

    குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

  19. 19 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  20. 20 أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّاۤءࣲ مَّهِینࣲ

    அலம் நக்லுக்கும் மின் மா மஹீன்

    அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

  21. 21 فَجَعَلۡنَـٰهُ فِی قَرَارࣲ مَّكِینٍ

    பா-ஜா-ல்னா-ஹூ ஃபே கரார் மகீன்

    பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

  22. 22 إِلَىٰ قَدَرࣲ مَّعۡلُومࣲ

    இலா கதர் மாலூம்

    ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

  23. 23 فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَـٰدِرُونَ

    ஃபகதர்னா பனிம் அல்-காதிரூன்

    இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

  24. 24 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  25. 25 أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

    அலம் நஜஅலி அல்-அர்த் கெஃபாதான்

    பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

  26. 26 أَحۡیَاۤءࣰ وَأَمۡوَ ٰ⁠تࣰا

    அஹ்யாஊன் வஅம்வ நம்பிக்கை தா

    உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

  27. 27 وَجَعَلۡنَا فِیهَا رَوَ ٰ⁠سِیَ شَـٰمِخَـٰتࣲ وَأَسۡقَیۡنَـٰكُم مَّاۤءࣰ فُرَاتࣰا

    வஜஅல்னா பிஹா ரவா நம்பிக்கை ஸேய ஷாமிகாத் வஅஸ்கைனாகும் ஃபுராதான்

    அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

  28. 28 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  29. 29 ٱنطَلِقُوۤا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    இன்தாலிகூ இலா குந்தும் பெஹி துகத்திபூன்

    "நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

  30. 30 ٱنطَلِقُوۤا۟ إِلَىٰ ظِلࣲّ ذِی ثَلَـٰثِ شُعَبࣲ

    இன்தாலிகூ இலா ழில் தி தலாதி ஷுஅப்

    மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

  31. 31 لَّا ظَلِیلࣲ وَلَا یُغۡنِی مِنَ ٱللَّهَبِ

    லா ழலீல் யுக்னீ மின அல்லாஹபி

    (அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

  32. 32 إِنَّهَا تَرۡمِی بِشَرَرࣲ كَٱلۡقَصۡرِ

    இன்னாஹா தர்மீ பெஷரர் கல் கஸ்ரி

    நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

  33. 33 كَأَنَّهُۥ جِمَـٰلَتࣱ صُفۡرࣱ

    கஅன்னாஹு ஜமாலதுன் சுஃப்ர்

    நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

  34. 34 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  35. 35 هَـٰذَا یَوۡمُ لَا یَنطِقُونَ

    ஹாஸா யவும் யந்திகூன

    இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

  36. 36 وَلَا یُؤۡذَنُ لَهُمۡ فَیَعۡتَذِرُونَ

    யூஉழனு லாஹும் ஃபயாத்ஃஜிரூன்

    அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  37. 37 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  38. 38 هَـٰذَا یَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَـٰكُمۡ وَٱلۡأَوَّلِینَ

    ஹாஸா யவும் ஜமஅநாகும் வல் அவ்வலீன்

    இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

  39. 39 فَإِن كَانَ لَكُمۡ كَیۡدࣱ فَكِیدُونِ

    ஃபா-இன் கானா லகும் கைத் ஃபெகிதூனெ

    எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.

  40. 40 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  41. 41 إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی ظِلَـٰلࣲ وَعُیُونࣲ

    இன்னா அல்-முத்தக்கீன் ஃபே ழிலால் வயூன்

    நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

  42. 42 وَفَوَ ٰ⁠كِهَ مِمَّا یَشۡتَهُونَ

    வஃபவ நம்பிக்கை கெஹ மேமா யஷ்தஹூன்

    இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

  43. 43 كُلُوا۟ وَٱشۡرَبُوا۟ هَنِیۤـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    குலூ வஷ்ருபூ ஹானியா பிமா தாமலூன்

    "நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).

  44. 44 إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    கழ நம்பிக்கை லேகா நஜ்ஸி அல்-முஹ்ஸினீன்

    நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

  45. 45 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  46. 46 كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِیلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

    குலூ வ தமத்தஊ கலீலான் இன்னாகும் முஜ்ரிமூன்

    (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

  47. 47 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  48. 48 وَإِذَا قِیلَ لَهُمُ ٱرۡكَعُوا۟ لَا یَرۡكَعُونَ

    வா இழா கிலா லஹும் இர்கௌ யார்கௌன

    'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

  49. 49 وَیۡلࣱ یَوۡمَىِٕذࣲ لِّلۡمُكَذِّبِینَ

    வய்ல் யவ்மைழின் லில்முக்ஸ்ஸிபின்

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

  50. 50 فَبِأَیِّ حَدِیثِۭ بَعۡدَهُۥ یُؤۡمِنُونَ

    ஃபபைய்யி ஹதீஸ் பதஹு யூமினூன்

    எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

This surah in other languages