Goddestination

Al-Qiyaama

அல்-கியாமா

உயிர்த்தெழுதல்

40 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 لَاۤ أُقۡسِمُ بِیَوۡمِ ٱلۡقِیَـٰمَةِ

    லா உக்ஸிமு ப்யௌமி அல்-கியாமா

    கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

  2. 2 وَلَاۤ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ

    வலா உக்ஸிமு பில்னஃப்ஸி அல்லாவ்வாமா

    நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

  3. 3 أَیَحۡسَبُ ٱلۡإِنسَـٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ

    அ யஹ்ஸபு அல்-இன்சான் அல்லான் நஜ்மா இழாமாஹு

    (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

  4. 4 بَلَىٰ قَـٰدِرِینَ عَلَىٰۤ أَن نُّسَوِّیَ بَنَانَهُۥ

    காதிரினா அன் நுஸவ்விய பனானஹு

    அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

  5. 5 بَلۡ یُرِیدُ ٱلۡإِنسَـٰنُ لِیَفۡجُرَ أَمَامَهُۥ

    யுரிது அல்-இன்சான் லெய்ஃப்ஜுர அமாஹு

    எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

  6. 6 یَسۡـَٔلُ أَیَّانَ یَوۡمُ ٱلۡقِیَـٰمَةِ

    யஸலு அய்யான் யவும் அல்-கியாமா

    "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

  7. 7 فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ

    ஃபைழா பரிக் அல்-பஸரு

    ஆகவே, பார்வையும் மழுங்கி-

  8. 8 وَخَسَفَ ٱلۡقَمَرُ

    வகஸஃப் அல்-கமரு

    சந்திரன் ஒளியும் மங்கி-

  9. 9 وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ

    வஜூமிஆ அஷ்-ஷம்ஸு வல்-கமரு

    சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

  10. 10 یَقُولُ ٱلۡإِنسَـٰنُ یَوۡمَىِٕذٍ أَیۡنَ ٱلۡمَفَرُّ

    யகூலு அல்-இன்சான் யவ்மைழின் ஐன அல்-மஃபர்ரு

    அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

  11. 11 كَلَّا لَا وَزَرَ

    வழர

    "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).

  12. 12 إِلَىٰ رَبِّكَ یَوۡمَىِٕذٍ ٱلۡمُسۡتَقَرُّ

    இலா ரப்பிக் யவ்மைழின் அல் முஸ்தகர்ர்

    அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

  13. 13 یُنَبَّؤُا۟ ٱلۡإِنسَـٰنُ یَوۡمَىِٕذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

    யுனப்பௌ அல்-இன்சான் யவ்மிஃழ் பிமா க்தாமா வஅக்கர

    அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

  14. 14 بَلِ ٱلۡإِنسَـٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِیرَةࣱ

    பலே அல்-இன்சான் அலா நஃப்ஸிஹி பஸீரா

    எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

  15. 15 وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِیرَهُۥ

    வலௌ அல்-கா மாஆழிரஹு

    அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

  16. 16 لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦۤ

    து-ஹ-ர்ரிக் பெஹி லிஸானக் லெ தஜ்ல

    (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

  17. 17 إِنَّ عَلَیۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ

    இன்னா அலைனா ஜமாஹு வா குர்ஆனஹு

    நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

  18. 18 فَإِذَا قَرَأۡنَـٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

    ஃபைழா திருக்குர்ஆனை ஃபத்தாபிக் குர்ஆனுஹு

    எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

  19. 19 ثُمَّ إِنَّ عَلَیۡنَا بَیَانَهُۥ

    தும்ம இன்னா அலைனா பயானஹு

    பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

  20. 20 كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ

    துஹிப்புன அல்-ஆஜிலா

    எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

  21. 21 وَتَذَرُونَ ٱلۡـَٔاخِرَةَ

    வதழரூன் அல்-ஆகிரா

    ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

  22. 22 وُجُوهࣱ یَوۡمَىِٕذࣲ نَّاضِرَةٌ

    வுஜுஹ யவ்மைழின் நாஜிரா

    அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

  23. 23 إِلَىٰ رَبِّهَا نَاظِرَةࣱ

    இலா ரப்பிஹா னாஜிரா

    தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

  24. 24 وَوُجُوهࣱ یَوۡمَىِٕذِۭ بَاسِرَةࣱ

    வொவுஜுஹ யவ்மிஃழ் பாஸிரா

    ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

  25. 25 تَظُنُّ أَن یُفۡعَلَ بِهَا فَاقِرَةࣱ

    தழுன்னு அன் யுஃபல பெஹா ஃபாகிரா

    இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

  26. 26 كَلَّاۤ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِیَ

    இழா பலகத் அத்-தராகியா

    அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

  27. 27 وَقِیلَ مَنۡۜ رَاقࣲ

    வகீல ராக்

    "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.

  28. 28 وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ

    வழன்ன அன்னஹு அல்-ஃபிராகு

    ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

  29. 29 وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

    வல்தஃப்தி அல்-ஸாக் பெல்ஸாக்

    இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

  30. 30 إِلَىٰ رَبِّكَ یَوۡمَىِٕذٍ ٱلۡمَسَاقُ

    இலா ரப்பிக் யவ்மைழின் அல்-மஸாகு

    உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

  31. 31 فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    ஃபலா ஸத்தக

    ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.

  32. 32 وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

    வலாகின் கத்தப்பா

    ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

  33. 33 ثُمَّ ذَهَبَ إِلَىٰۤ أَهۡلِهِۦ یَتَمَطَّىٰۤ

    தும்ம தஹப அஹ்லிஹீ யதமத்தா

    பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

  34. 34 أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ

    ஔலா லகா ஃபாவ்லா

    கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

  35. 35 ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰۤ

    தும்ம ஔலா லகா

    பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

  36. 36 أَیَحۡسَبُ ٱلۡإِنسَـٰنُ أَن یُتۡرَكَ سُدًى

    அ யஹ்ஸபு அல்-இன்சான் அன் யூத்ரக சுதா

    வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

  37. 37 أَلَمۡ یَكُ نُطۡفَةࣰ مِّن مَّنِیࣲّ یُمۡنَىٰ

    அலம் யாக் நுத்ஃபா மின் மனி யும்னா

    (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

  38. 38 ثُمَّ كَانَ عَلَقَةࣰ فَخَلَقَ فَسَوَّىٰ

    தும்ம கானா அலக ஃபக்லக் ஃபஸவ்வா

    பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

  39. 39 فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَیۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰۤ

    ஃபஜல மின்ஹு அல்-ஜௌஜைன் அல்-தகரா வல்-உந்தா

    பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

  40. 40 أَلَیۡسَ ذَ ٰ⁠لِكَ بِقَـٰدِرٍ عَلَىٰۤ أَن یُحۡـِۧیَ ٱلۡمَوۡتَىٰ

    அலைஸ ழ நம்பிக்கை லேகா பெகாதிர் அன் யுஹிய அல் மௌதா

    (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

This surah in other languages