Goddestination

Abasa

அபஸ்

முகஞ்சுளித்தான்

42 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 عَبَسَ وَتَوَلَّىٰۤ

    அபஸ் வா தவல்லா

    அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

  2. 2 أَن جَاۤءَهُ ٱلۡأَعۡمَىٰ

    அன் ஜாஆஹு அல்-ஆமா

    அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

  3. 3 وَمَا یُدۡرِیكَ لَعَلَّهُۥ یَزَّكَّىٰۤ

    வமா யூத்‌ரிக் லஅலுஹு யஃஜ்ஜக்கா

    (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

  4. 4 أَوۡ یَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰۤ

    ஔ யஃஜ்ஜக்கரு ஃபதன்ஃபஹு

    அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

  5. 5 أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

    அம்மா மனி

    (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

  6. 6 فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    ஃபா-அன்-த தஸத்தா

    நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

  7. 7 وَمَا عَلَیۡكَ أَلَّا یَزَّكَّىٰ

    வமா அலைக் அல்லா

    ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

  8. 8 وَأَمَّا مَن جَاۤءَكَ یَسۡعَىٰ

    வா அம்மா மேன் ஜாஆக யஸா

    ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

  9. 9 وَهُوَ یَخۡشَىٰ

    வஹுவ யக்ஷா

    அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

  10. 10 فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ

    ஃபா-அன்-த அன்ஹு தலஹ்யா

    அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

  11. 11 كَلَّاۤ إِنَّهَا تَذۡكِرَةࣱ

    இன்னாஹா தஸ்கீரா

    அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

  12. 12 فَمَن شَاۤءَ ذَكَرَهُۥ

    ஃபமன் ஷா தகரஹு

    எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

  13. 13 فِی صُحُفࣲ مُّكَرَّمَةࣲ

    ஃபே ஸுஹுஃப் முகர்ரமா

    (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

  14. 14 مَّرۡفُوعَةࣲ مُّطَهَّرَةِۭ

    முதஹ்ஹாரா

    உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

  15. 15 بِأَیۡدِی سَفَرَةࣲ

    பெயாதி சஃபரஹ

    (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

  16. 16 كِرَامِۭ بَرَرَةࣲ

    கேராமி பரர

    (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

  17. 17 قُتِلَ ٱلۡإِنسَـٰنُ مَاۤ أَكۡفَرَهُۥ

    குதில அல்-இன்சான் மா அக்ஃபருஹு

    (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

  18. 18 مِنۡ أَیِّ شَیۡءٍ خَلَقَهُۥ

    ஐய்யி ஷை கலகஹு

    எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

  19. 19 مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    மின் நுத்ஃபா கலகஹு ஃபக்தர்ஹு

    (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

  20. 20 ثُمَّ ٱلسَّبِیلَ یَسَّرَهُۥ

    தும்ம அஸ்-ஸபீல் யஸ்ஸரஹு

    பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

  21. 21 ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

    தும்ம அமாதாஹு ஃபாஅக்பரஹு

    பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

  22. 22 ثُمَّ إِذَا شَاۤءَ أَنشَرَهُۥ

    தும்ம இழா ஷா அன்ஷரஹு

    பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

  23. 23 كَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ أَمَرَهُۥ

    லம்மா யாக்ஸி மா அமரஹு

    (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

  24. 24 فَلۡیَنظُرِ ٱلۡإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦۤ

    ஃபல்யன்ழுர் அல்-இன்சான் இலா தாஆமிஹி

    எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

  25. 25 أَنَّا صَبَبۡنَا ٱلۡمَاۤءَ صَبࣰّا

    அன்னா ஸபப்ன அல்-மா ஸப்பான்

    நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

  26. 26 ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقࣰّا

    தும்ம ஷக்னா அல்-அர்த் ஷக்கா

    பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

  27. 27 فَأَنۢبَتۡنَا فِیهَا حَبࣰّا

    ஃபாஅன்ப்த்னா பிஹா ஹப்பன்

    பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

  28. 28 وَعِنَبࣰا وَقَضۡبࣰا

    வா எனப் வகாத்பா

    திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

  29. 29 وَزَیۡتُونࣰا وَنَخۡلࣰا

    வழய்தூனா வெனக்லா

    ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

  30. 30 وَحَدَاۤىِٕقَ غُلۡبࣰا

    வஹதாய்கா குல்பன்

    அடர்ந்த தோட்டங்களையும்,

  31. 31 وَفَـٰكِهَةࣰ وَأَبࣰّا

    வஃபகிஹா வா அப்பான்

    பழங்களையும், தீவனங்களையும்-

  32. 32 مَّتَـٰعࣰا لَّكُمۡ وَلِأَنۡعَـٰمِكُمۡ

    மதான் லாகும் வலே ஆனாமிகும்

    (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

  33. 33 فَإِذَا جَاۤءَتِ ٱلصَّاۤخَّةُ

    ஃபைழா ஜாஆத் அஸ்-ஸாகா

    ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

  34. 34 یَوۡمَ یَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِیهِ

    யவும் யாஃபிர்ரு அல் மார்-உ அகிஹி

    அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

  35. 35 وَأُمِّهِۦ وَأَبِیهِ

    வா உம்மிஹி வா பிஹி

    தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

  36. 36 وَصَـٰحِبَتِهِۦ وَبَنِیهِ

    வஸாஹிபதிஹி வபநிஹி

    தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

  37. 37 لِكُلِّ ٱمۡرِئࣲ مِّنۡهُمۡ یَوۡمَىِٕذࣲ شَأۡنࣱ یُغۡنِیهِ

    லே குல் இம்ரி மின்ஹும் யவ்மைழின் ஷான் யுக்நிஹி

    அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

  38. 38 وُجُوهࣱ یَوۡمَىِٕذࣲ مُّسۡفِرَةࣱ

    வுஜுஹ யவ்மைழின் முஸ்ஃபிரா

    அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

  39. 39 ضَاحِكَةࣱ مُّسۡتَبۡشِرَةࣱ

    தாஹிகா முஸ்தப்ஷிரா

    சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

  40. 40 وَوُجُوهࣱ یَوۡمَىِٕذٍ عَلَیۡهَا غَبَرَةࣱ

    வொவுஜுஹ யவ்மைழின் அலைஹா கபரா

    ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

  41. 41 تَرۡهَقُهَا قَتَرَةٌ

    தர்ஹகுஹா கதரா

    அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

  42. 42 أُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ

    உலாய்க ஹம் அல்-கஃபரா அல்-ஃபஜ்ரா

    அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

This surah in other languages